×

நம்மாழ்வார் விருதுக்கான இயற்கை விவசாய பணிகள்: கலெக்டர் ஆய்வு

மதுரை, ஜன. 7: மதுரை மாவட்டத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து விருக்காக விண்ணப்பித்திருந்த இயற்கை முறை விவசாயிகளின் பண்ணைகளை கலெக்டர் சங்கீதா ஆய்வு செய்தார். இதன்படி, மதுரை கிழக்கு வட்டாரம் பூலாங்குளம் கிராமத்தில் பூங்குழலி மற்றும் கல்லுப்பட்டி வட்டாரம் மோதகம் கிராமத்தில் அரவிந்தன் ஆகியோர் வயல்களில் அங்கக முறைப்படி விவசாயம் செய்யப்பட்டுள்ள நெல், மா, கொய்யா மற்றும் ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு மற்றும் பஞ்சகாவ்யா, தே.மோர் கரைசல் மற்றும் மீன் அமிலம் தயாரிப்பு ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார்.இந்த ஆய்வின் போது, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) சுப்புராஜ் உள்ளிட்ட மாவட்ட அளவிலான தேர்வுக்குழு உறுப்பினர்கள் மற்றும் வேளாண் அதிகாரிகள் உடனிருந்தனர்

The post நம்மாழ்வார் விருதுக்கான இயற்கை விவசாய பணிகள்: கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Collector ,Sangeeta ,Madurai… ,Dinakaran ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...